பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஒருநாள் அடிப்படை சம்பளத்தை 1,000 ருபாவாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒருநாள் அடிப்படை சம்பளத்தை 600 ரூபாவுக்கு மேல் அதிகரிக்க முடியாது என பெருந்தோட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள தேயிலை சபையில் இன்று மதியம் ஊடக சந்திப்பில் பெருந்தோட்ட சம்மேளனம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு அமைய தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்;தை 940 ரூபா வரை மாத்திரமே அதிகரிக்க முடியும் என்றும், அதற்கு மேல் இந்தத் தொகையை அதிகரிக்க முடியாது என்றும் பெருந்தோட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தத்திற்கு அமைய நாளொன்றுக்கு வழங்கப்படும் 500 ரூபா அடிப்படை சம்பளம் 20 சதவீதத்தால் அதிகரித்து, 600 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு கொடுப்பனவு மற்றும் விலை பிரிவு மேலதிக கொடுப்பனவு தவிர வரவு ஊக்குவிப்பு கொடுப்பனவை 33 சதவீதத்தால் அதிகரித்து 80 ரூபாவாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஊழியர் சேமலாப நிதியை 20 சதவீதத்தால் உயர்த்தி 90 ரூபா வரை அதிகரித்து நாளாந்த சம்பளத்தை 940ரூபாவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பெருந்தோட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது குறித்த பெருந்தோட்ட சம்மேளனம் விடுத்துள்ள ஊடக அறிக்கை