ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை குறித்த ஆய்வுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவொன்று அடுத்த வருட முற்பகுதியில் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடக ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
ஆடை உள்ளிட்ட பல்வேறுப்பட்ட பொருட்களின் ஏற்றுமதிக்காக ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வரிச்சலுகை கடந்த வருடம் இலங்கைக்கு மீண்டும் வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த வருடத்தின் நடுப்பகுதியில் இலங்கை வந்திருந்த குழு ஒன்று இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வின் அடிப்படையிலான அறிக்கையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெற உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் கூட்டத்தில் முன் வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் 2018 ஆம் ஆண்டுக்கான ஆய்வு அறிக்கையை தயாரிப்பதற்காக அடுத்த வருடம் முற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இலங்கைக்கு விஜயம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.