பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு முதலாம் வருடத்தில் 625 ரூபாவை அடிப்படை வேதனமாகவும் இரண்டாம் வருடம் முதல் அதனை 25 ரூபாவினால் அதிகரிக்கவும் முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் தொழிலமைச்சர் தயா கமகே முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் இன்று தனித்தனியே கலந்துரையாடலை நடத்தினர்.
முதலாவதாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அமைச்சர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் 625 ரூபா அடிப்படை வேதனம் என்ற நிலைப்பாட்டை முதலாளி சம்மேளனத்தின் நிறைவேற்று அதிகாரிகள் முன்வைத்துள்ளனர்.
இந்த அடிப்படை வேதனமானது முதல்வருடத்தில் 625 ரூபாவாகவும் இரண்டாம் வருடம் முதல் அதனை 25 ரூபாவினால் அதிகரிக்கவும் முதலாளிமார் சம்மேளனம் தமது தீர்மானத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில், இதனையடுத்து கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்தையில் முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாடு குறித்து அமைச்சர்கள் கலந்துiயாடியுள்ளனர்.