ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவரை சுங்கத் திணைக்களப் பணிப்பாளராக நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு துறைமுக சுங்கத்துறை அதிகாரிகள் சேவையிலிருந்து விலகி, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுங்கத் திணைக்கள பணிப்பாளராக பதவி வகித்த பீ.எஸ்.எம். சார்ல்ஸை திடீரென பதவி நீக்கி, இந்தப் புதிய பணிப்பாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தின் பயணிகள் மற்றும் ஏற்றமதித்துறை என்பனவற்றை தவிர்ந்த ஏனைய அனைத்து துறைகளையும் சேர்ந்த ஊழியர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சுங்கத்துறை பணிப்பாளர்களாக நிர்வாக அதிகாரிகள் அல்லது சுங்கத்துறையின் சிரேஸ்ட அதிகரிகளே கடமையாற்றினர்.
இந்த நிலையில், தற்போது ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவரை சுங்கத்திணைக்களப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சுங்கத் திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றிய திருமதி. சார்ல்ஸை மீண்டும் அந்தப் பதவியில் நியமிக்கும்வரை பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளதாக குறித்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்னர்.