போராட்டம் கைவிடப்பட்டது; பணிப்பாளர் நாயகமாக மீண்டும் பி.எஸ்.எம் சார்ள்ஸ்

ஒன்றிணைந்த சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு கடந்த 6 நாட்களாக முன்னெடுத்து வந்த சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டம் நேற்று இரவுடன் கைவிடப்பட்டதாக சுங்க அதிகாரிகள் சங்க தலைவர் உதித்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய பி.எஸ்.எம் சார்ள்ஸ் மீண்டும் அந்த பதவிக்கு நியமிப்பதாக நிதியமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்ததது.

இந்த அறிவிப்பை அடுத்தே இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட பி.எஸ்.எம் சார்ள்சை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்காக நிதியமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த அமைச்சரவை பத்திரம் நேற்றைய தினம் விலக்கி கொள்ளப்பட்டது.

இதற்கமைய சுங்க பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பி.எஸ்.எம் சார்ள்ஸ் மீண்டும் மூன்று மாதகாலப்பகுதிக்காக நியமிக்க அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.

சுங்க அதிகாரிகள் ஒருவார காலமாக மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, 12 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை நட்டம் ஏற்பட்டிருப்பதாக சுங்க திணைக்கள பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

7000க்கும் அதிகமான பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் விடுவிக்கப்படாமல் தேங்கி இருப்பதாக அந்த சங்கத்தின் உபச் செயலாளர் சுதத் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கூடிய விரைவில் அவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435