நாளை பாடசாலைகள் நடைபெறுமா?

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் சங்கம் நாளை (13) சுகயீன லீவு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இப்போராட்டத்திற்கு பல ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு வழங்கவுள்ளன.

22 வருட பி.சி பெரேராவின் சம்பள முரண்பாட்டை நீக்கி சம்பளத்தை அதிகரித்தல், புதிய துணை விதிகளினூடாக கொள்ளையடித்த 30 மாத கால நிலுவைச் சம்பளத்தை வழங்கல், அனைத்து ஆசிரிய உதவியாளர்களையும் ஆசிரியர் தரத்திற்கு உள்வாங்குதல், 2016ம் ஆண்டுக்குப் பின்னர் நியமனம் பெற்ற அசிரியர்களுக்கு இல்லாமல் செய்யப்பட்ட ஓய்வூதிய சம்பளத் திட்டத்தை மீ்ண்டும் பெற்றுக்கொடுத்தல், பாடசாலை கற்றல், கற்பித்தல் செயற்பாட்டுக்கு இடையூறு விளைவிக்கும், பாடசாலை நிருவாகத்திற்கு இடையூறாக இருக்கும் ஆவணங்களை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட மேலதிக வேலையில் விட்டு நீக்குதல், பாடசாலை பராமரிப்புக்காக பெற்றோரிடம் பணம் அறவிடப்படுவதை நிறுத்தி, மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்குதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இச்சுகயீன லீவு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

சுகயீன லீவு போராட்டம் மாத்திரமன்றி, நாளை பல இடங்களில் போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

பதுளை, மொனராகல, கண்டி, நுகேகொடை, புத்தளம், தங்காலை, பண்டாரகம, வெல்லவாய, மொரவக, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435