கடந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் விளைவாக நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இன்றைய தொழிலாளர் தினத்தில் நடாத்துவதற்கு திட்டமிட்டுருந்த ஊர்வலங்களை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுதந்திர கட்சி தனது மே தின கூட்டத்தை இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடத்தவுள்ளது. இந்நிகழ்வில், சுதந்திர கட்சியினர், தொழிற்சங்க பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். மக்கள் விடுதலை முன்னனி தனது மே தின நிகழ்வை பத்தரமுல்ல, பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னனி தலைமை காரியாலயத்தில் நடத்தவுள்ளது. அந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னனியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கை சமசமாஜ கட்சியினர் இன்று காலை 9.30 மணிக்கு ராஜகிரிய ஆயுர்வேத சந்தியில் அமைந்துள்ள கலாநிதி எம்.என் பெரேராவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தவுள்ளனர்.
எது எவ்வாறு இருப்பினும் முன்னணி சோசலிஸ்ட் கட்சி ஊர்வலம் மற்றும் மே தின நிகழ்வை நுகேகொட ஆனந்த சமரகோன் மண்டபத்தின் முன்பாக நடத்தவுள்ளதாகவும் CMU தனது மே தின நிகழ்வை கொள்ளுபிட்டியவில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் நடத்தவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிளிநொச்சியில் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வேலைத்தளம்