தனியார் துறை சம்பளம் அதிகரிப்பு

வாழ்க்கைச் செலவுக்கேற்ப வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் தனியார் துறை சம்பளத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தனியார் துறையில் பணியாற்றுவோரில் அடிப்படை சம்பளமாக 12500 ரூபாவை பெறுவோருக்கு 500 ரூபாவால் சம்பளத்தை அதிகரிக்குமாறு தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை முன்மொழிந்துள்ளது. தனியார் துறையின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

2016 இல 03 இற்கமைய ஊழியர்களின் அதிகுறைந்த சம்பள சட்டத்தின் கீழ் 2016 ஜனவரி முதலா் திகதியிலிருந்து தனியார் துறையில் பணியாற்றுவோரின் சம்பளம் 10,000 ரூபாவும் ஆகக்குறைந்த நாளாந்த சம்பளம் 400 ரூபாவாகவும் இருத்தல் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

 

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435