நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு இன்று சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுளை கொண்டாட்ட ரீதியாக தவிர்ப்பதற்கு தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் தீர்மானித்துள்ளன.
இதற்கமைய பேரணிகள் பொதுக் கூட்டங்கள் என்பவற்றைத் தவிர்த்து அமைதியான முறையில் இன்றைய மேதின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களின் துயரில் பங்கேற்கும் வகையில் இன்றைய தொழிலாளர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அவர்களின் போராட்டத்திற்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வெற்றியின் பயனாக மே மாதம் முதலாம் திகதி வருடாந்தம் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது
சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகள் கொண்டாட்டங்களாகும் பேரணி களாகவும் மிகவும் சிறப்பானதாக இடம்பெறும் அது போலவே இலங்கையிலும் தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளும் வருடாந்தம் கொண்டாட்ட ரீதியாக முனெடுக்கப்படும்.
இந்தநிலையில், பாதுகாப்புக் காரணங்ளைக் கருத்திற்கொண்டு இம்முறை தொழிலாளர் தின நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
எனினும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை மன்றக்கல்லூரியில் நினைவு நிகழ்வொன்றை நடத்தவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மே தின நிகழ்வுகளை தவிர்த்துள்ளது.
ஜே.வி.பி தமது கட்சி தலைமையகத்தில் நினைவு நிகழ்வொன்றை நடத்தவுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி பத்தரமுல்லையில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் மே தினத்தை கொண்டாடவுள்ளது.
இதேவேளை, இன்றைய மே தினத்தை பிரார்த்தனை மற்றும் அஞ்சலி நிகழ்வாக நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன தீர்மானித்துள்ளன.
அத்துடன், நாடு முழுவதும் உள்ள ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என்பனவும் தொழிலளர் தின நிகழ்வுகளை கொண்டாட்ட ரீதியாக தவிர்த்து அமைதியான முறையில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன.
வேலைத்தளம்