பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அவசியமில்லை

நாட்டுக்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அவசியமில்லை. தற்போதுள்ள சட்டத்தை மாற்றங்களுக்குட்படுத்தி மேலும் பலப்படுத்துவதே தற்போதைய தேவையாகும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நியுஸ்பெஸ்ட்டுடனான விசேட செவ்வியின் போதே இராணுவத்தளபதி இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதனால் மக்கள் சந்தேகமின்றி வழமை போன்று செயற்படலாம் என்றும் இலங்கையின் உள்ளக பாதுகாப்பிற்கு எந்தவொரு வௌிநாட்டு இராணுவமோ, குழுவோ உள்வாங்கப்படாது என்றும் தேவையான பிரிவுகளுக்கு விசேட நிபுணர்களின் உதவிகள் மட்டும் பெறப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435