ஒலிரூட் தொழிலாளர் குடியிறுப்பில் தீ

தலவாக்கலை – ஒலிரூட் தோட்டத்தில் நேற்றிரவு 10 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக, குறித்த லயன் குடியிறுப்புகளில் வசித்துவந்த சுமார் 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் ஒலிரூட் தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 22 சிறுவர்கள், 29 ஆண்கள் மற்றும் 49 பெண்கள் உள்ளடங்குகின்றனர்.

ஒலிரூட் பகுதியில் உள்ள நெடுங்குடியிறுப்பு ஒன்றில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ, ஏனைய அனைத்து வீடுகளுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. பின்னர், தலவாக்கலை காவல்துறையினர் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபை தீயணைப்பு படையினர், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு படையினர், மற்றும் பொது மக்கள் ஆகியோர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் தலவாக்கலை காவல்துறையினர், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435