நாடு பூராவும் வீடுகளில் உதவியாளர்களாக பணியாற்றுவோருக்கான நிச்சயிக்கப்பட்ட சம்பளத்தை வீட்டுப் பணியாளர்கள் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அச்சங்கம் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில், வீட்டுப்பணியாளர்களுக்கான சம்பளத்தை நாளாந்தம், மணித்தியாலம் மற்றும் மாதாந்தம் சம்பளாக அச்சங்கம் வௌியிட்டுள்ளது.
அதற்கமைய, ஒரு வீட்டில் ஒரு மணித்தியாலத்திற்கு 200 ரூபாவும் 4 மணித்தியாலங்களுக்கு 450 ரூபாவும் நாள் சேவைக்கு (8 மணித்தியாலங்கள்) 850 ரூபாவும் சம்பளம் வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அச்சங்கம் மாதாந்தம் 25000.00 ரூபாவும் சம்பளமாக வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இக்குறிப்பிட்ட சம்பளம் வீட்டுப்பணியாளர்களுக்கு கிடைகின்றதா என்பது குறித்த கண்காணிப்பதற்கு இச்சங்கம் நாட்டின் பல பிரதேசங்களில் அலுவலகங்களை ஸ்தாபித்துள்ளது. அதில் ஒரு அலுவலகம் கடந்த அண்மையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.