ஜூலை 18,19 தொழிற்சங்க நடவடிக்கை தன்னிச்சையானது- கல்விசேவை சங்கங்கள்

எதிர்வரும் 18ம் 19ம் திகதிகளில் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சுகயீன விடுமுறை போராட்டமானது ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடாது மூன்று தொழிற்சங்கங்கள் மட்டும் தன்னிச்சையாக எடுத்துள்ள தீர்மானம் கல்விச்சேவை தொடர்பான தொழிற்சங்கங்கள் இணைந்து வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இலங்கை பொது கல்விச்சேவை சங்கத்தின் தலைவி வசந்தா ஹந்தபான்கொட தெரிவித்துள்ளார். இதனை மறுதலித்தே ஏனைய தொழிற்சங்கங்கள் இணைந்து இவ்வறிக்கையை வௌியிட்டுள்ளன.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஆசிரியர்- அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது உட்பட 4 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து ஆசிரியர் -அதிபர் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து மார்ச் 13ம் திகதி வெற்றிகரமாக சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்தோம். அதன் இரண்டாம் கட்டமாக கடந்த மே மாதம் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்திருந்தபோதிலும் நாட்டில் ஏற்பட்ட துர்ப்பாக்கிய சம்பவம் காரணமாக அச்செயற்பாடு தற்காலிகமாக பிற்போடப்பட்டது.

அனைத்து தொழிற்சங்களும் ஒன்றிணைந்து எதிர்கால வேலைத்திட்டங்களை திட்டமிட்டுக்கொண்டிருக்கும் வேளையில் 3 தொழிற்சங்கங்கள் மாத்திரம் ஏனைய தொழிற்சங்கங்களின் யோசனைகளை கேட்காமலும் அறிவிக்காமலும் ஜூலை 18,19ம் திகதிகளில் தொழிற்சங்க நடவடிக்கையை ஏற்பாடு செய்துள்ளது. தற்போதைய நிலையையும் போராட்டத்தின் எதிர்கால திட்டமிடல் தொடர்பாக சிந்திக்காது இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கு அந்த செயற்பாட்டுடன் எந்தவித தொடர்பும் கிடையாது. கூட்டுச்செயற்பாட்டு அனைத்து தொழிற்சங்கங்களும் இணக்கம் தெரிவித்துள்ள அதேவேளை, 3 தொழிற்சங்கங்கள் மட்டும் இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளமை மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளதுடன் எந்த நோக்கத்திற்காக செய்கின்றார்கள் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அத்துடன் இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தவர்கள் எந்தவித நியாயமான காரணங்களும் இன்றி மே 9,10 வேலைநிறுத்தத்தின் மீது சேறு பூசுவதன் நோக்கம் யாது?

இதன் காரணமாக ஜூலை 18,19 ஆகிய தினங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் கீழே பெயர்குறிப்பிடப்பட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. அத்துடன் சம்பள பிரச்சினை தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகளும் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் அறிவிக்கப்படும் என்று இத்துடன் அறியத்தருகிறோம்.

குழுக்களாக பிரியாது கூட்டாளிகளாக ஆசிரியர் – அதிபர் போராட்டத்தை வெற்றிபெற செய்வோம்!

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435