முகாமைத்துவ சேவை திணைக்கள அனுமதியின்றி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு வழங்கவிருந்த வழங்கவிருந்த பதவியுயர்வு மற்றும் சம்பள உயர்வை உடனடியாக நிறுத்துமாறு உயர் நீதிமன்றம் தடையுத்தவு பிரப்பித்துள்ளது.
இலங்கை சுதந்திர தேசிய தொழிலாளர் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மூன்று நீதிபதிகள் குழாம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 29ம் திகதி வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பள மற்றும் பதவி உயர்வுக்கான சட்ட விதிகளை மீறி முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடானது தமது சங்கம் மட்டுமன்றி ஏனைய ஊழியர்களும் பாதிக்கப்படுவதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.
இவ்வகையான செயற்பாடுகள் தமது அடிப்படை உரிமையை மீறம் செயலாக உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள அச்சங்கம் எதிர்வாதியாக இலங்கை போக்குவரத்து சபை, சபையின் தலைவர், முகாதை்துவ சேவை திணைக்களம் மற்றும் நீதியரசர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.