ஆபத்தான தொழில்களின் பட்டியல் தொடர்பான வர்த்தமானியின் கட்டளைகளில் திருத்தங்களை மேற்கொள்ள தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு தயாராகி வருகிறது.
1956/47 ஆம் இலக்க சட்டத்தின் பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் தொழில்வாய்ப்பு சட்டத்தின்கீழ், 2010ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் 18 வயதிற்கு குறைந்த இளைஞர்களுக்கு அபாயகரமான 51 தொழில்கள் அடையாளம் காணப்பட்டன.
இந்த நிலையில், தற்போது சேவை இடம்பெறும் பகுதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அபாயகரமான தொழில்வாய்ப்புகள் 77 இனங்காணப்பட்டுள்ளன.
இதற்கமைய, ஆபத்தான தொழில்கள் தொடர்பான உத்தேச கட்டளையானது நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதுடன், அதன் அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் அரச வர்த்தமானியில் அதனை வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, தொழில் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 1980/47ஆம் இலக்க வாக்காளர் பதிவு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவதற்காகவும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும், வாக்காளர் பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகள் ஆரம்பிக்கப்படும் வரையில், வாக்களிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் குறித்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.