எதிர்வரும் செப்டெம்பர் 26,27ம் திகதிகளில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அதிபர் ஆசிரியர்களை இலங்கைக்கு வரவழைத்து இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அச்சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
1997 பீ.சி பெரேரா ஆணைக்குழு அறிக்கையினால் ஏற்பட்ட ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுக்காமையினால் இத்தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சாலிய மதீவ்- லயனல் பெர்ணாண்டோ இருவரின் தலைமையில் முன் வைக்கப்பட்ட6/2006 சுற்றுநிருபத்தினால் அதிபர் ஆசிரியர் சம்பளப்பிரச்சினை மேலும் அதிகரித்தது. 6/2006 சுற்றுநிருபத்தினூடாக புகையிரதம், சுகாதாரம், தபால், கல்வி ஆகிய துறைகளுக்கு பாரிய சம்பள பிரச்சினை உருவாகியது. பின்நாட்களில் ஏற்பட்ட எதிர்ப்புக்களின் காரணமாக பிரச்சினைகளை தீர்ப்பதற்காக 2017ம் ஆண்டு அமைச்சரவைத் தெரிவுக்குழுவொன்று உருவாக்கப்பட்டது.
அதற்கமைய, அவ்வமைச்சரவைக்குழு ஆசிரியர்சேவை, புகையிரத சேவை, சுகாதார சேவை ஆகியன மூடிய சேவைகளாக அறிவிக்க முன்மொழியப்பட்டது. எனினும் அம்முன்மொழிவை செயற்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.
இதனால் ஒரு குறிப்பிட்ட சேவைக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்ட போது ஏனைய சேவைகளும் பாதிக்கப்படுவதாக காரணம் கூறி பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டது. அவர்களால் உருவாக்கப்பட்ட தரமற்ற பிழையை அதனை தீர்ப்பது கடினம் என்று கூறுவது கேலிக்கூத்தானது என்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதனால் சம்பள ஆணைக்குழுவின் விளையாட்டுக்கு எதிராக மேலே குறிப்பிட்ட துறைகளை சார்ந்தோர் ஒன்றிணைந்து நடவடிக்கை வேண்டுமென தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.