பட்டதாரிகள் 1100 பேருக்கு ஆசிரியர் நியமனம்

தென் மாகாண பட்டதாரிகள் 1100 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 27ம் திகதி மாலை 2.00 வெலிகம நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், நாடகம் மற்றும் கற்புல கலை, சித்திரம், நடனம், இசை, சுகாதாரம், உடற்கல்வி, தகவல் தொழில்நுட்பம், விவசாயம், பௌதீக விஞ்ஞானம், இரசாயன விஞ்ஞானம், அடிப்படை சிங்களம், வரலாறு, குடியியல் விஞ்ஞானம், அரசியல் விஞ்ஞானம், புவியியல் விஞ்ஞானம் ஆகிய துறைகளுக்கு இப்பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

இந்நியமனம் பெறும் பட்டதாரிகளில் 166 தமிழ் பட்டதாரிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435