இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழில்வாண்மையாளர்கள் சங்கத்தினர் இன்று (4) சுகயீன விடமுறை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தமது சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும், அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்க ஒன்றியத்தின் நாடாளாவிய சேவை மற்றும் அதற்கு சமாந்தரமான சேவைகளில் ஈடுபடுபவர்களின் வேதன பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டம் குறித்து முன்னதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக 06/2006 ஆம் இலக்க தேசிய வேதனக் கொள்கையை மீறி அரசாங்கத்தின் ஏனைய நிறைவேற்றுத்துறை பணியாளர்களைக் கருத்திற்கொள்ளாமல், சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைவு திணைக்களம் மற்றும் நீதித்துறையுடன் தொடர்புடைய நிறைவேற்று அதிகாரிகளின் வேதனம் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரசாங்கத்தினால், ஏனைய நிறைவேற்றுத்துறை சேவை பணியாளர்களுக்கு பாரிய வேதன முரண்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கல்வி நிர்வாக சேவை தொழில்வாண்மையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.