கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் போதனா பயிற்சி டிப்ளோமாவைப் பூர்த்தி செய்து குறைந்த புள்ளிகளைப் பெற்ற 159 பேருக்கும் நியமனங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் செயலாளர்களிடம் கோரியுள்ளது.
ஆசிரியர் போதனா டிப்ளோமாவைப் பூர்த்தி செய்த 4286 பேருக்கான நியமனங்கள் எதிர்வரும் 8ம் திகதி கையளிக்கப்படவுள்ள நிலையில் குறைந்த புள்ளிகளைப் பெற்றுள்ள 159 பேருக்கு நியமனம் வழங்கப்படப்போவதில்லை என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்காமல் நியமனங்களை வழங்குமாறும் அச்சங்கம் கோரியுள்ளது.
2013ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி பெறப்பட்ட புள்ளிகளுக்கமைய இவர்கள் பயிற்சியில் உரிய காலத்தில் இணைத்துக்கொள்ளாமல் 3 வருடங்கள் கடந்தே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். எனவே அவர்களுடைய டிப்ளோமாவை பூர்த்தி செய்ய மேலும் 3 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் மொத்தமாக 6 வருடங்கள் கடந்துள்ளன என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் குறைந்த அளவு புள்ளியை பெற்று சித்தியடைந்துள்ள 159 பேரில் இரண்டாம் முறை பரீட்சை பெறுபேறுகள் மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எவ்வித அநீதிக்கும் உள்ளாகாமல் உரிய தினத்திலே அல்லது அதற்கு அண்மித்த திகதியிலோ நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கல்விச் செயலாளர்களிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.