ஆசிரியர் சேவையில் சுமார் இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் பேர் வரை உள்ளனர். அவர்களில் 10 வீதமானவர்கள் அச்சேவைக்கு பொருத்தமற்றவர்கள் என்று கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று (18) காலை குருணாகல வெலகெதர மைதானத்தில் நடைபெற்ற வடமேல் மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கைகயில் பரீட்சையில் சித்திபெற்ற சான்றிதழ்கள் இருந்தபோதிலும் ஆசிரியர் சேவைக்கே உரித்தான தரம் இல்லாமல் இல்லாமையே இதற்கு காரணம். கற்பிப்பதில் மாத்திரமே ஆசிரியரின் கடமை பொறுப்புக்கள் நிறைவடையப்போவதில்லை. பாடசாலைக்குள் மாணவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுவதும் வகுப்பாசிரியரின் கடமையாகும்.
புதிய தொழில்நுட்பத்துடன் மாணவர்கள் முன்னோக்கிச் செல்லும் போது வகுப்பறைக்குள்ளும் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் மாணவர்களை தயார்படுத்துவதும் ஆசிரியரின் கடமையாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் 1400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம் – அத