வௌிவாரியாக பட்டப்படிப்பை பூர்த்தி செய்த 4,178 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (18) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
அரச பல்கலைக்கழகங்களில் வௌிவாரியாக பட்டப்படிப்பை பூர்த்தி செய்த குறித்த பட்டதாரிகளுக்கு பயிற்சி அதிகாரிகளாக பிரதமர் ரணில்விக்கிரம நியமனங்களை வழங்கினார்.
இருபதாயிரம் பட்டதாரிகளுக்கு பயிற்சி அதிகாரிகளாக நியமனம் வழங்குவதற்கு தேசிய கொள்கை மற்றும் பொருளாதார திட்டமிடல் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு கடந்த வருடம் அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்தது. அதன் முதற்கட்டமாக கடந்த 2018 ஓகஸ்ட் மாதம் 3200 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக கடந்த ஓகஸ்ட் மாதம் 12,133 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. இதன்போது உள்ளவாரியாக பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது, 887 வௌிவாரி பட்டதாரிகளே இதன்போது உள்வாங்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று (18) மேலும் 4,178 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. அதற்கமைய இதுவரை 19,511 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.
இதேவேளை, பல்வேறு காரணங்களினால் நியமனம் கிடைக்காதவர்கள், மற்றும் அதனிமித்தம் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பத்தவர்க 489 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது. இந்நியமன வழங்கலில் 43/ 45 வயது வரையான பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பிலும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
2013ல் வெளிவாரிப் பட்டம் பெற்ற, 45வயது கடந்தவர்கள் என்ன செய்வது. அவர்களுக்கு ஒரு தீர்வும் இல்லையா