நிரந்தர தீர்மானம் இல்லையேல் தீக்குளிப்போம் – எச்சரிக்கும் பட்டதாரிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் சிலர் இன்று (19) முதல் மழைக்கு மத்தியிலும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

பட்டதாரிகள் நியமனத்தின் போது தங்களுடைய நியமனங்கள் புறக்கணிக்கப்பட்ட தாகவும் இதுவரை வேலைவாய்ப்புகள் கிடைக்காதவர்களும் வெளிவாரி பட்டங்களை பெற்ற சிலரும் இந்த போராட்டத்தில் இணைந்து இருக்கின்றார்கள்

தமது போராட்டத்திற்கான நிரந்தர தீர்வு கிடைக்காத பட்சத்தில் 48 மணித்தியாலத்திற்குள் நிரந்தர தீர்மானம் இல்லையெனில் தீக்குளிப்போம் என்று பதாகைகளை தாங்கியவாறு குறித்த போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன் திருச்செல்வம் ரவீந்திரன் ரத்தினம் ஜெகதீஸ்வரன் அண்டனி ரங்க துசார காமினி திசாநாயக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக கலந்துகொண்டிருந்தனர்

2016ஆம் ஆண்டுக்கு மேல் பட்டம் முடித்த உள்வாரி நியமனம் அதில் பாரபட்சம் பார்த்து எம்மை தவிர்த்தது ஏன்? பாரபட்சமான நியமனம் அரசு ஏன் வழங்கியது அரச பதவியில் உள்ளவர்கள் அலட்சியமாக இருப்பது ஏன்? ஓட்டுப்போட ஓட்டை துளைத்து வந்த அரசு இப்ப ஓடி மறைவது ஏன்? பிரதமர் கொடுத்த பேட்டியில் 2016 க்கு மேல் உள்வாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கி விட்டோம் அப்படி என்றால் அவர்கள் கணக்கில் நாங்கள் யார்? என்று பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு மாணவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இதன்போது கருத்து தெரிவித்த மாணவர்கள் 48 மணிநேரத்திற்குள் உரிய பதில் எழுத்து மூலமாக வழங்கப்படவில்லை எனில் தீக்குளிப்போம் என்று அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435