அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கவனத்திற்கொண்டு ஊழியர் ஒருவரின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 தொடக்கம் 12,500 ரூபாவாக அதிகரிக்கவும் நாளாந்த சம்பளத்தை 400 ரூபாவில் இருந்த 500 ரூபாவாக அதிகரிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இச்சம்பள அதிகரிப்புக்கு அமைய, 2016 3ம் இலக்க ஊழியர்களுக்கான ஆகக்குறைந்த சம்பள சட்டத்தின் 3ம் அகதிகாரத்தை திருத்தி, சட்டவரைபு ஒன்றை தயாரித்து சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வௌியிடவும் அதன்பின்னர் பாராளுமன்ற அனுமதிக்கு சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை அங்கத்துவமற்ற தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரின் கோரிக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குறித்த முன்மொழிவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.