தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயின்று வெளிமாவட்ட பாடசாலைகளில் நியமனம் பெற்ற டிப்ளோமாதாரிகள் மீண்டும் ஊவா மாகாணத்தில் நியமனம் பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையிலும், வெளிமாவட்டங்களில் கடமைகளை பொறுப்பேற்காதவர்கள், உடனடியாக மத்திய கல்வி அமைச்சுக்கு சென்று தாம் பதவி ஏற்காதமையினை கடிதம்மூலம் உறுதிப்படுத்தி ஊவா மாகாணத்திற்கான நியமனத்தை பெறமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஊவா மாகாண டிப்ளோமாதாரிகள் தொடர்பான தகவல்கள் உரிய நேரத்தில் வழங்கப்படாதமையின் காரணமாக மத்திய கல்வி அமைச்சு அவர்களை வெளிமாவட்ட பாடசாலைகளுக்கு நியமித்தது.
இதனை அடுத்து தம்மை சொந்த மாகாணத்தில் கடமைக்கு அமர்த்துமாறு 54 டிப்ளோமாதாரிகள் கல்வி அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட மேன் முறையீட்டு சபையில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கைகளை ஆராயந்த மேன்முறையீட்டு சபை, சம்பந்தப்பட்டவர்கள் கல்வி அமைச்சுக்கு வருகைதந்து தாம் வெளிமாவட்ட பாடசாலைகளில் பதவி ஏற்காமையினை கடிதம் மூலம் உறுதிப்படுத்தி ஊவா மாகாணத்திற்கான நியமனத்தை பெற முடியும் என தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஏற்கனவே வெளிமாவட்டங்களில் கடமையேற்ற ஆசிரியர்கள் தொடர்ந்தும் அந்த மாவட்டங்களிலேயே கடமையாற்ற வேண்டும் என கல்வி அமைச்சு தெரித்துள்ளது.
மேலும் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து மேன்முறையீட்டு சபைக்கு தாக்கல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான முறைபாடுகளும் பரீசீலிக்கப்பட்டு அவற்றின் நியாயதன்மைக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொறுத்தமற்ற முறையீடுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.