பணிப்புறக்கணிப்பு குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு

பணிப்புறக்கணிப்பு குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு

நாட்டில் பல்வேறு துறைசார் தொழிற்சங்னத்தினர் முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரயில்வே தொழிற்சங்கம் மற்றும் அதிபர்-ஆசிரியர்கள் தொழிற்சங்கம் போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில், அது குறித்து ஆராய இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது அமைச்சரவை உப குழு நிமியக்கப்பட்டுள்ள.

இந்த அமைச்சரவை உபகுழுவில் அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித்த சேனாரட்ன, ரஞ்சித் மத்தும பண்டார, வஜிர அபேவர்தன மற்றும் பதில் போக்குவரத்து அமைச்சர் அசோக்க அபேசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தொடருந்து பணியாளர்கள், அதிபர் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பரிந்துரைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435