தோட்ட பணிக்குழு ஊழியர்களின் புதிய கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் இது வரையில் தொழிற்சங்கங்கள் இறுத்தீர்மானம் எடுக்கவில்லை என்று சங்கத் தலைவர் சத்துர சமரசிங்க, பொதுச் செயலாளர் நாத் அமரசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
புதிய கூட்டு ஒப்பந்தம் குறித்த பல தடவைகள் முதலாளிமார் சம்மேளத்திற்கும் தோட்ட பணிக்குழு ஊழியர்கள் சங்கத்திற்கும் இடையில் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 25 வீத சம்பள அதிகரிப்பு மற்றும் வருடாந்தம் 50 வீத சம்பள வழங்கவும் அதற்கான மூன்று வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் வௌியிட்டிருந்தது. எனினும் இது தொடர்பில் தொழிற்சங்கம் இறுதித் தீர்மானத்தை இன்னமும் எடுக்கவில்லை.
கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் மீண்டும் பேச்சுவார்தைகள் நடத்தவுள்ளோம். தோட்டப் பணிக்குழு ஊழியர்களுக்கான கூட்டு ஒப்பந்தம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தோட்ட பணிக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னரே எமது சங்கம் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என்றும் சத்துர சமரசிங்க மேலும் தெரிவித்தார்.