விசேட சுற்றுலா பொதிகளை வழங்குவதாக பொதுமக்களிடம் ஆயிரக்கணக்கான திர்ஹம்களை அறவிட்ட நிறுவனமொன்று அவர்களை ஏமாற்றியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணங்களை ஏற்பாடு செய்யும் நோவோ எலைட் என்று சுற்றுலா நிறுவனமே இவ்வாறு மக்களை ஏமாற்றியுள்ளது.
15,000 திர்ஹம்கள் தொடக்கம் 30,000 திர்ஹம்கள் வரை குறித்த நிறுவனத்திடம் வழங்கியதாகவும் எனினும் அவர்கள் உறுதியளித்த பயண ஏற்பாடுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும் விசனம் தெரிவித்துள்ள பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் கதைக்க முயற்சித்த போதிலும் அவர்களிடமிருந்த எந்தவிதமான பொறுப்பான பதில்களும் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் இக்குற்றச்சாட்டை குறித்த நிறுவனம் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.