அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள் 900 பேர் விரைவில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவாரகள் என்று சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார முகாமைத்துவ உதவியாளர்களின் நிகழ்வொன்று அண்மையில் பியகம விலேஜ் ஹோட்டலில் நடைபெற்றபோது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு விரைவில் புதியவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். எனினும் அவர்களை சேவையில் இணைத்துக்கொள்வதில் தற்போது பரீட்சையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதனால் திட்டமிட்டப்படி அவர்களை சேவையில் இணைத்துக்கொள்ள முடியவில்லை. நாம் திட்டமிட்டபடி அனைத்தும் நடந்திருந்தால் இன்று இவ்விடத்தில் அவர்களும் இருந்திருப்பார்கள். எனினும் சேவை மேலும் விரிவுபடுத்தப்படும். 900 பேரை சேவையில் ஒரே நேரத்தில் இணைப்பதில் எவ்வளவு கஷ்டமான வேலை என்று உங்களுக்கே தெரியும். வேறொரு அமைச்சர் இந்தளவு எண்ணிக்கையானவர்களை சேவையில் இணைத்துக்கொள்ள மாட்டார்கள்.
சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவை என்பது மிகவும் முக்கியமான சேவையாகும். சுகாதார சேவையை அமைதியாக கொண்டு செல்ல அவர்களின் சேவை மிகவும் முக்கியமானது. சேவையில் 900 பேர் மேலதிகமாக இணைத்தாலும் அந்த எண்ணிக்கை போதாது சேவை வழங்குவதற்கு, என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.