தாக்குதலை கண்டித்து மின்சாரசபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

வவுனியாவில் நேற்று மாலை ஆச்சிபுரம் பகுதிக்கு தொழில் நிமிர்த்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாக்குதல் நடத்தியதில் ஆறு மின்சார சபை ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை வரை இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். எனினும் தாக்குதலுக்கு தலைமை வகித்தவர் உட்பட இன்னும் பலர் கைது செய்யப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளதுடன் , பொலிசாரின் அசமந்தப் போக்கைக்கண்டித்து பணிப்புறக்கணிப்பை இன்று காலை ஆரம்பித்துள்ளனர் என்று மின்சாரசபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா பூங்கா வீதியிலுள்ள மின்சார சபை தலைமை அலுவலகத்தில் ஒன்றுகூடிய மின்சார சபை ஊழியர்கள் தமது ஊழியர்கள் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ள முக்கிய போதை பொருள் வியாபாரியை உடனடியாக கைது செய்யப்படவேண்டும். கைது செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமது கடமையை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் மின்சாரசபை ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது மின்சாரசபையின் அவசர தேவைகள் உட்பட அனைத்துப்பணிகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இன்று தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவிட்டால் மன்னார், கிளிநொச்சி பகுதிகளிலுள்ள மின்சார சபை ஊழியர்களும் தமக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இன்று பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளும் மின்சார சபை ஊழியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தாக்குதலுக்குள்ளாகிய மின்சாரசபை ஊழியர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435