சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொது ஊழியர் சங்கம் என்பன புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.
களுத்துறை அஸோசியேட்டட் மோட்டர் வேஸ் மற்றும் அஸோசியேட்டட் ஒடோ வேஸ் (AMW, AAW) ஆகிய தொழிற்சாலைகளுடன் இவ்வொப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இம்மாதம் 7ம் திகதி இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்களினூடாக 3 வருடங்களுக்கு 10,000 ரூபா சம்பளம் அதிகரிக்கச் செய்யவும் அதற்கு மேலதிகமாக சாதாரண சம்பள வீத வளர்ச்சி என்பன தொழிலாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகளாகும்.
இது தவிர தொழிற்சங்க நடவடிக்கைளை தொழிற்சாலையில் நடத்தவும் சங்கக் கிளைக்கான அலுவலகம் ஒன்றை தொழிற்சாலை வளாகத்தில் வழங்கவும் அங்கத்தவர்களின் அங்கத்துவப்பணத்தை சம்பளத்தில் கழித்து சங்கத்திற்கு வழங்கவும் இவ்வொப்பந்தம் வழிகோலியுள்ளது/
உலகின் டயர் தயாரிப்பில் பிரசித்தி பெற்ற டுபாயில் இயங்கும் தொழிற்சாலைக்கு சொந்தமான குறித்த இரு நிறுவனங்களும் ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் தமது கிளை தொழிற்சாலைகளை நிறுவியுள்ளன. இந்நிறுவனத்தின் கீழ் சுமார் 49.000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.