வீட்டுப்பணிப்பெண்களுக்கும் கண்ணியமான தொழில் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று ஹட்டனில் நேற்று (02) நடைபெற்றது.
ப்பெராடெக்ட் தொழிற்சங்கமானது சொலிடாரிட்டி நிறுவத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் ஹட்டன் மற்றும் லக்ஷபான ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 30 பெண்கள் கலந்துகொண்டிருந்தனர்.
பணியிடங்களில் வீட்டுப்பணிப்பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஆகக்குறைந்த சம்பளம் என்பன குறித்தும் இந்நிகழ்வில் கவனம் செலுத்தப்பட்டது.
இப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராதல் அதற்கு ஒன்றிணைந்த அமைப்பொன்றை உருவாக்குதல் மற்றும் அப்பிரதேசங்களில் உள்ள ஏனைய வீட்டுப்பணிப்பெண்களை ஒழுங்கமைத்தல் என்பன தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.