​தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர்கள் கல்வி நிதியத்தினால் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு மேற்கல்விக்கான புலமைப்பரிசில் வழங்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

க.பொ.த உயர்தரம் மற்றும் பட்டயக்கற்கை நெறிகள் மற்றும் இலங்கை தொழில்நுட்பக்கல்லூரிகளில் தொழிற்கல்வியை மேற்கொள்தற்கு இப்புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

க.பொ.த சாதாரணதரத்தில் 6 திறமைச்தித்தி பெற்ற அல்லது க.பொ.த உயர்தர பரீட்சைகளில் தோற்றிய 25 வயதுக்கு குறைந்தவர்கள் இப்புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் பிறப்புச்சான்றிதழ் பிரதி, க.பொ.த உயர்தர, சாதாரணதர கல்விச்சான்றிதழ், மற்றும் பெருந்தோட்டத்துறை மேற்பார்வையாளரின் உறுதிப்படுத்தலுடன் பெற்றோர் இறுதியாக பெற்ற சம்பள விபரங்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவங்களை www.hcicolobo.goa.in என்ற இணையதள முகவரியினூடாக தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியும். விண்ணப்பங்களை நேரடியாக பெற விரும்புகிறவர்கள் இந்திய உயர்ஸ்தானிகராலயம், இல.3638, காலி வீதி, கொழும்பு 3 என்ற முகவரியிலும் அல்லது உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயம், இல. 31, ரஜபிஹில்ல மாவத்தை, கண்டி என்ற முகவரியிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இம்மாதம் (டிசம்பர்) 27ம் திகதிக்கு முன்னர், கிடைக்கக்கூடியவாறு Honorary Secretary, CEWET c/o High Commission of India, P.O. Box 882, Colombo-03 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435