சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (10) ப்பெராடெக்ட் தொழிற்சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடைபெறுகிறது.
வன்முறைகளும் துன்புறுத்தல்களுமற்ற பணியிடங்களை அவசியத்தை வலியுறுத்தி, அதற்காக பொதுமக்கள் ஒன்று திரள வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சர்வதேச தொழிலாளர் அமையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள LO C190 ஒப்பந்தத்தை (துன்புறுத்தல்களும் வன்முறைகளுமற்ற பணியிடங்கள்) இலங்கையிலும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தை வலியுறத்துதல், அதன் முக்கியத்துவகம் குறித்து பொதுமக்களை தௌிவுபடுத்தல் என்பன இந்நிகழ்வில் நோக்கமாகும்.
இதேவேளை, வீட்டுப்பணியாளர்கள் சங்கத்தின் பிரதான நோக்காக ‘வீட்டுப்பணியாளர்களின் உரிமைகளும் மனித உரிமைகளே’ என்ற தொனிப்பொருளில் முறைசாரா துறை பாதுகாப்புக்காகவும் குறித்த ஒப்பந்தத்தை இலங்கையில் நிறைவேற்றுமாறு அவர்கள் இந்நிகழ்வில் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்.
துன்புறுத்தல்களும் துஷ்பிரயோகங்களுமற்ற பணியுலகத்தை உருவாக்குவதற்காக குறித்த ஒப்பந்தத்தை சர்வதேசரீதியில் வௌிப்படுத்துவதற்கான ஐநாவின் 16 நாட்கள் பிரசார நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இந்நிலையில் இந்நிகழ்வு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. இப்பிரசார நடவடிக்கை நாளையுடன் (11) நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.