தனியார்துறை ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் தொழில்வழங்குநர் பங்களிப்பை 15 வீதமாக அதிகரிக்கவும் தொழிலற்ற தனியார் மற்றும் அரச துறை ஊழியர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் அரசாங்க கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என ECONOMYNEXT இணையதளம் செய்தி வௌியிட்டுள்ளது.
தற்போது ஊழியர்களில ஊதியத்தில் இருந்து 8 வீதமும் தொழில்வழங்குநர் ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 12 வீதத்தையும் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு செய்கின்றனர். எனினும் சில தொழில்வழங்குநர்கள் கொடுப்பனவுகளை வழங்கி ஊழியர் சேமலாப நிதியை வழங்காது கம்பனி செலவீனமாக காட்ட முயற்சிக்கின்றனர்.
இலங்கையில் ஊழியர்கள் முதுமையடையும் வீதம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றமையினால் பாதீட்டில் துண்டுவிழும் தொகையை நிவர்த்தி செய்வதற்கு பாலமாக அமையும் கட்டுப்பாட்டு மூலதனமானது விரைவில் குறைவடைந்து வருகிறது. எவ்வாறு இருப்பினும் உயர்ந்த சம்பளம் மற்றும் முறைசார் துறை தொழில்வாய்ப்புக்கள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு
ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொண்ட ஒரு வார காலத்திற்குள் தொழில் திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும் என்று 2020 – 2025 கொள்கை சுட்டிக்காட்டுகிறது.
2018ம் ஆண்டு ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதி 8.8 வீதத்தால் அதிகரித்தது. அதாவது ஆரம்பத்தில் 133,3 பில்லியன் ரூபாயாக இருந்த தொகை 2018ம் ஆண்டு 145 பில்லியன் ரூபாயாக அதிகரித்தது. இதேவேளை, பயனாளர்களுக்கு 8.1 வீதம் அதாவது 108 பில்லியன் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டுக்கு முதல் பங்களிப்பு 15.8 பில்லியன் ரூபாயில் இருந்து 37 பில்லியனாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, ராஜபக்ஷ நிர்வாகத்தின் 2025 கொள்கை அறிக்கையானது தொழிலற்ற தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு காப்புறுதி திட்டமொன்று அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளது.
வேலைத்தளம்