தையில் வழி பிறக்குமாம்: ஆயிரம் ரூபாய் தொடர்பில் ஆறுமுகன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இன்றைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவர் என தெரிவித்துள்ள அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தைப்பிறந்தாள் வழி பிறக்கும் என சம்பளம் விடயம் தொடர்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கண்டியில் கடந்த தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மலையக மக்களின் அபிவிருத்தி தொடர்பில் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். இவ் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முன்னாள் அமைச்சர் பி.பி.தேவராஜ் ஊடாக குழு ஒன்று நியமிக்கப்பட்டு இது தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பெருந்தோட்ட தொழிலாளர் மக்களுக்கு புதிய அரசாங்கத்தால் செய்து கொடுக்க வேண்டிய அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை பிரதமர் அக்குழுவுக்கு வழங்கியிருக்கின்றார்.

அதேநேரத்தில் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் மதுபான சாலைகள் அகற்றுவது தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது மற்றும் கணிதம், விஞ்ஞான பாடங்களுக்குரிய ஆசிரியர்கள் பற்றாக்குறை பெரும்பாலும் நிலவுவதனால் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை இத்துறைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பெருந்தோட்ட பகுதிகளில்  வைத்திய சேவையை விருத்திக்கும் வகையில் தாதியர் பயிற்சி கல்லூரி ஒன்றை அமைப்பது தொடர்பாகவும், இதன்போது பிரதமரின் கவனத்திற்கு அக்குழு கொண்டு வந்துள்ளது. பெருந்தோட்ட பகுதிகள் இன்று காடுகளாக்கப்பட்டு இருக்கும் தேயிலை காணிகளை தோட்ட இளைஞர்களுக்கு பிரித்து கொடுத்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறாக பல்வேறு கோரிக்கைகள் இ.தொ.கா குழுவினரால் முன்வைக்கப்பட்டுள்ளது. இவைகளை அனைத்தையும் நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கவனம் செலுத்தி வரும் காங்கிரஸ் சொன்ன விடயத்தில் இருந்து எதுவுமே மாறுப்படாது.

கண்டி பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்ட பகுதிகள் மூன்று பிரிவுகளாக கூரிடப்பட்டு அக்காணிகளை தனியார்களுக்கும் தோட்ட தொழிலாளர்களும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் ஏ,பீ என தேர்ந்தெடுக்கும் பகுதிகளை வெளியாருக்கும் கரடு முரடான தேயிலை காணிகளை சீ என வகைப்படுத்தி பல வருடங்களாக ஆண்டு வந்த தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது. அண்மையில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவை சந்தித்த வேளையில் இது தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டு இக்காணி பிரிப்புகளை இடைநிறுத்த கலந்துரையாடப்பட்டுள்ளது.

தை பிறந்தாள் தோட்ட தொழிலதாளர்களுக்கு வழி பிறக்கும் என தெரிவித்த போது, ஊடகவியலாளர் ஒருவர் குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார் அவ்வாறு என்றால் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் சம்பளம் விடயமா என்று கேட்ட போது, நிச்சயமாக பொருத்து இருந்து பாருங்கள் என்று அமைச்சர் பதிலளித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435