அரச நியமனம் வழங்குமாறு வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்
அரச நியமனத்தை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள், வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாகாணத்தில் நீண்டகாலமாக கடமையாற்றி வருகின்றபோதிலும் தங்களுக்கு நியமனம் வழங்கப்படாதமைக்கு இதன்போது அவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், நியமனங்களை வழங்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நியமனத்தை வழங்கக் கோரி பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியபோதும், நியமனங்கள் உரிய முறையில் வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், தொண்டர் ஆசிரியர்களை எதிர்வரும் புதன்கிழமை ஆளுநர் சந்திப்பார் என அவரது அலுவலகதி;னால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து. போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றுள்ளனர்.