ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புக்கான விண்ணப்பம் கோரல்

ஒரு லட்சம் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க உரிய தகைமையுடையவர்களிடமிருந்து பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்‌ ‘’செளபாக்கியத்தின்‌ நோக்கு” கொள்கை பிரகடனத்துக்குஏற்ப “வறுமை இல்லாத இலங்கையை உருவாக்குதல்‌” பிரதான குறிக்கோள்‌ ஆகும்‌. அதற்கான ஒரு நிலையானமற்றும்‌ முக்கியமான உபாய மார்க்கமாக குறைந்த வருமானம்‌ பெறும்‌ குடும்பங்களைச்‌ சேர்ந்த மிகக்‌ குறைந்தகல்வித்‌ தகைமை உடைய குடும்ப உறுப்பினர்களுக்கு முறையான தொழிற்‌ பயிற்சி வழங்கி பின்னர்‌ அரசாங்கத்தில்‌நிலையான வேலைவாய்ப்பினைப்‌ பெற்றுத்‌ தருவதற்காக ஜனாதிபதியின்‌ விசேட அவதானத்துடன்‌வேலைத்திட்டம்‌ ஆரம்பிக்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பைப்‌ பெறுவதன்‌ மூலம்‌ அவர்களை நிரந்தரமான வருமானம்‌பெறுபவர்களாக உருவாக்கி, அந்தக்‌ குடும்பத்தை வறுமையிலிருந்து விடுவித்தல்‌ மற்றும்‌ அந்த செயலணிமூலம்‌திறமைமிக்க சுபீட்சமான நாட்டை உருவாக்கும்‌ செயற்பாட்டுக்கு உறுதியான பங்களிப்பை வழங்குவதற்காக ஒருஇலட்சம்‌ (100,000) வேலைவாய்ப்புகளைப்‌ பெற்றுத்‌ தரும்‌ பூர்வாங்க நடவடிக்கை 2020 ஜனவரி 30 ம்‌ திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களம்‌ மூலம்‌விதிமுறையான நடைமுறைகளுக்கு ஏற்ப தெரிந்தெடுக்கப்படும்‌ வேலைவாய்ப்புபயனாளிகளுக்கு ஆறு (6) மாதங்கள்‌ தொழிற்‌ பயிற்சி வழங்கப்படும்‌. இந்த அறிவிப்பில்‌குறிக்கப்பட்ட பயிற்சி துறைகளுக்கிடையே அவர்கள்‌ வசிக்கும்‌ பிரதேங்களில்‌ இருக்கும்‌வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களுக்கு பொருந்தும்‌ வகையில்‌ தொழிற்‌ பயிற்சியை வழங்குவதற்காககுறிக்கப்பட்ட தகைமையை பூர்த்தி செய்யும்‌ இலங்கைக்‌ பிரஜைகளிடமாருந்து விண்ணப்பங்கள்‌கோரப்படுகின்றன.

1. தகைமை

அ. க.பொ.த (சாதாரண தரம்‌) சித்திக்கான மட்டத்தைவிட குறைந்த மட்ட கல்வித்‌தகைமை உடையவராக இருத்தல்‌ (கல்வித்‌ தகைமை குறைந்தவிண்ணப்பதாரிகளுக்கு முன்றுரிமை வழங்கப்படும்‌)
ஆ. விண்ணப்பம்‌ கோரப்படும்‌ இறுதி நாளில்‌ 18 வயதுக்குக்‌ குறையாமலும்‌ 40 வயதுக்கு மேற்படாமலும்‌ இருத்தல்‌ (35 வயதுக்கு குறைந்த விண்ணப்பதாரிகளுக்கு முதலாவது முன்னுரிமை வழங்கப்படும்‌ என்பதுடன்‌ 35 வயதுக்கும்‌ 40 வயதுக்கும்‌ இடைப்பட்ட விண்ணப்பத்தாரார்களுக்கு அடுத்த முக்கியத்துவம்‌)
இ. சமுர்த்தி நிவாரணம்‌ பெறுவதற்கு தகைமை பெற்ற ஆனால்‌ நிவாரணம்‌ பெறாதகுடும்பத்தில்‌ வேலைவாய்ப்பு இல்லாத உறுப்பினர்களாக இருத்தல்‌ அல்லது.
ஈ. சமுர்த்தி நிவாரணம்‌ பெற்ற குடும்பத்தில்‌ வேலைவாய்ப்பு இல்லாத உறுப்பினராக இருத்தல்‌ அல்லது.
உ. வயோதிப, நோயாளியான பெற்றோர்‌ அல்லது ஊனமுற்ற உறுப்பினர்கள்‌ உள்ள குடும்பத்தில்‌ வேலைவாய்ப்பு இல்லாத உறுப்பினராக இருத்தல்‌.
ஊ. விண்ணப்பிக்கும்‌ பிரதேசத்தில்‌ வசிப்பவராக இருத்தல்‌

2. பயிற்சிக்காக தெரிவு செய்தல்‌:

2.1 ஓரு குடும்பத்தில்‌ உள்ள மேற்படி இலக்கம்‌ 1ல்‌ குறித்த தகைமையைப்‌ பூர்த்திசெய்த ஒரு விண்ணப்பதாரி பற்றி மட்டும்‌ பரிசீலனை செய்யப்படும்‌.
2.2 விண்ணப்பதாரி வசிக்கும்‌ கிராமத்துக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களில்‌ உள்ள வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்கள்‌ மற்றும்‌ விண்ணப்பதாரி கோரிய பயிற்சிச்களம்‌ ஆகிய அனைத்தும்‌ கலனத்தில்‌ கொண்டு ஏற்ற தொழிற்‌ பயிற்சி தீர்மானிக்கப்படும்‌.
2.3. விண்ணப்பதாரி வசிக்கும்‌ பிரதேசத்துகுள்‌ அல்லது அண்மையிலுள்ள பிரதேங்களில்‌உள்ள பயிற்சி நிலையங்களில்‌ இந்த பயிற்சி வழங்கப்படும்‌.
2.4 ஏற்ற பயிற்சியின்‌ பின்னர்‌ வசிக்கும்‌ பிரதேசத்தில்‌ அல்லது அண்மையிலுள்ள பிரதேசங்களில்‌ வேலை வாய்ப்பு வழங்கப்படும்‌

3. சம்பளம்‌ மற்றும்‌ கொடுப்பனவுகள்‌

ஆறு மாதங்கள்‌ (6) தொடரும்‌ பயிற்சிக்‌ காலத்தில்‌ மாதம்‌ ஒன்றுக்கு ரூபா 22,500 கொடுப்பனவு வழங்கப்படும்‌. பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த பின்னர்‌ பயிற்சி பெற்றதொழிற்‌ களத்துக்கு ஏற்ப நிரந்தரமாக வசிக்கும்‌ பிரதேசத்துக்குள்‌ அரசாங்கம்‌ அனுமதித்தஆரம்ப தொழில்நுட்பம்‌ சாராத (PL.1) சம்பளம்‌ மற்றும்‌ கொடுப்பனவு உடைய அரசாங்கநிரந்தர பதவிக்கான நியமனம்‌ பெறும்‌ வாய்ப்பு பயிற்சி பயனாளிகளுக்கு கிடைக்கும்‌. 10வருடங்கள்‌ திருப்தியான பரந்த சேவை காலத்தைப்‌ பூர்த்தி செய்த பின்னர்‌ ஒய்வூதியஉரிமை துறைகள்‌.

4. பயிற்சிக்கான சம்பந்தப்பட்ட களங்கள்‌.

1. விவசாய உற்பத்தி உதவியாளர்‌
2. பாராமரிப்பு மற்றும்‌ சுத்திகரிப்பு சேவை உதவியாளர்‌
3. மக்கள்‌ சுகாதார மேம்பாட்டு உதவியாளர்‌
4. அனர்த்த முகாமைத்துவ உதவியாளர்‌
5. சுற்றாடல்‌ முகாமைத்துவ உதவியாளர்‌
6. விற்பனை சேவை உதவியாளர்‌
7. போக்குவரத்து நடவடிக்கை உதவியாளர்‌
8. கணினி தகவல்‌ தொழிநுட்பம்‌, தொலைபேசி செயற்பாடு மற்றும்‌ தொலைத்தொடர்பு உதவியாளர்‌
9.போதைப்‌ பொருள்‌ நிவாரண நடவடிக்கை உதவியாளர்‌
10. சமையலாளர்‌, உணவுவிடுதி சேவையாளர்‌ மற்றும்‌ உணவுசாலை உதவியாளர்‌
11. ஐந்து நட்சத்திர சுற்றுலா ஹோட்டல்‌, பங்களா உதவியாளர்‌ மற்றும்‌ தோட்டஅலங்கார உதவியாளர்‌
12. விளையாட்டு நிறுவன உடற்பயிற்சி நிலைய உதவியாளர்‌, விளையாட்டரங்கு, நீச்சல்‌ தடாகம்‌ உதவியாளர்‌ மற்றும்‌ உயிர்பாதுகாப்பு உதவியாளர்‌
13. தச்சுத்‌ தொழிலாளர்‌ மற்றும்‌ தச்சுத்தொழில்‌ உதவியாளர்‌
14, ஆடைகள்‌ தையலாளர்‌
15. மேசன்‌ பணியாளர்‌ மற்றும்‌ மேசன்‌ உதவியாளர்‌
16. ஒப்பனை அலங்கார நிலையம்‌ உதவியாளர்‌
17. மின்சார தொழில்நுட்ப பணியாளர்‌ மற்றும்‌ மின்சார தொழில்நுட்ப உதவியாளர்‌சேவை
18. சாரதி மற்றும்‌ சாரதி உதவியாளர்‌
19. மிருக பாரமரிப்பு மற்றும்‌ கடற்றொழில்‌ நடவடிக்கை உதவியாளர்‌
20. எரிபொருள்‌ நிரப்பு நிலையம்‌ மற்றும்‌ வாகனங்கள்‌ சுத்திகரிப்பு சேவை உதவியாளர்‌
21. வலை மற்றும்‌ மீன்பிடி உபகரணங்கள்‌ திருத்த சேவை உதவியாளர்‌
22. ஆயுதம்‌ தரிக்காத பாதுகாப்பு சேவையாளர்‌
23. சிறுவர்‌ பராமரிப்பு அபிவிருத்தி உதவியாளர்‌
24. பொருத்துனர்‌ (வேல்டின்‌) உதவியாளர்‌ மற்றும்‌ நீர்குழாய்‌ தொழில்‌ நுட்பவியலாளர்‌
25. வீடு பாராமரிப்பு, நலன்புரி மற்றும்‌ பராமரிப்பு சேவை

5. விண்ணப்பப்‌ படிவங்கள்‌

விண்ணப்பப்‌ பத்திரங்கள் பிரதேச செயலாளர்‌ அலுவலகங்களில் பெற்றுக்‌ கொள்ள முடியும்‌. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்‌பத்திரத்தை 2020.02.15 ம்‌ திகதி அல்லது அதற்கு முன்னர்‌ விண்ணப்பத்தாரர் வசிக்கும்‌ கிராமசேவையாளர்‌ பிரிவில்‌ கிராம உத்தியோகத்தரிடம்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435