புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்

இலங்கையின் தேசிய வருமானத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது தொடர்பில் குழுவமைத்து ஆராயப்படவுள்ளது. அதிக எண்ணிக்கையான இலங்கையர் பணியாற்றும் நாடுகளின் உதவியும் இதற்கு பெறப்படும்.

தொழில் வழங்குநரும் தொழிலாளியும் மாதாந்தம் இதற்கு பங்களிப்பு வழங்குவர். ஊழியருக்கான ஓய்வூதிய கணக்கை வௌிநாட்டு தொழில்வழங்குநர் ஆரம்பிக்க வேண்டும். இவ்விடயம் தொடர்பில் இலங்கையர் பணியாற்றும் நாடுகளின் அரசாங்கங்களுடன் நாம் கலந்துரையாடவுள்ளோம். ஊழியரின் கணக்கிற்கு மாதாந்தம் குறிப்பிட்ட தொகையை வைப்பு செய்வது குறித்து இலங்கை வௌிநாட்டு தொழில்வழங்குநருடன் ஒப்பந்தம் கைச்சாத்திடவேண்டியேற்படலாம் என்று அவர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் வீடுகளுக்கு அனுப்பும் பணம் முற்றாக செலவழியுமானால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அவர்களுக்கு எதிர்கால பாதுகாப்பை வழங்குவது அரசாங்கத்தின் கடமை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435