கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள முதலாவது இலங்கையர் இனங்காணப்பட்டுள்ளார்.
அவர் அங்கொடையில் உள்ள ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவை பணிப்பாளரான வைத்தியர் அனில் ஜாசிஙக் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த நபர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுற்றுலாத்துறை வழிகாட்டியான அவர், இத்தாலியை சேர்ந்த சில சுற்றுலா பயணிகளுடன் கடந்த தினங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்றிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளரான மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.