கொரோனா வைரஸிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடபில் நாளொன்றின் பெருமளவு நேரத்தில் பணியிடங்களில் தங்கியிருப்பவ்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
உங்கள் பணியிடத்தை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
1. ஒரு நபர் காய்ச்சல் மற்றும் சளி போன்ற லேசான அறிகுறிகளைக் வெளிப்படுத்தினால், அந்த நிலை முழுமையாக குணமாகும்வரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை கூறுங்கள். முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வசதியை ஏற்படுத்துங்கள்.
2. கதவுகளின் கைப்பிடிகள், தொலைபேசிகள், மேசையின் மேற்பரப்புகள், ஸ்டேப்ளர்கள் போன்ற உபகரணங்களை தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.
3. இயன்றளவு சவர்க்காரமிட்டு கைகளை நன்றாக கழுவுங்கள். முகம், வாய், மூக்கு, கண்களைத் தொடுவதைத் தவிர்க்கவும். கோவிட் -19 வைரஸ் பொதுவாக தொடுகை மூலம் பரவுகிறது. சேவையில் ஈடுபடும் மற்றவர்களுக்கும் இதுபற்றி நினைவூட்டுங்கள்.
4. கூட்டங்களை கூட்டுவதை இயன்றளவு குறைக்கவும். கூட்டங்களை ஒத்திவைத்தல் மற்றும் வீடியோ கொன்பரன்சிங் / குழு அழைப்பு போன்ற நவீன தகவல் தொடர்பு நுட்பங்களைப் பயன்படுத்துதல்.
உங்கள் பணியிடத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புக்களை குறைப்பது, உங்கள் குடும்பத்தில் அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்துக்கும் ஏதுவாய் இருக்கும்.
#COVID19 #CoronaVirusOutbreak சுகாதார மேம்பாட்டு பணியகம்