வௌிநாட்டில் பணிபுரிவோர் குறைந்த வட்டியில் கடன் பெற

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தற்போது வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை யாவரும் அறிந்த விடயமே.

அரச வங்கிகளினூடாக வழங்கப்படவுள்ள இக்கடன்களை வழங்க குறைந்த எண்ணிக்கையான ஆவணங்கள் மட்டுமே தேவைப்பட்டுள்ளமை மற்றொரு விசேட அம்சமாகும்.

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டவர்களுக்காக மட்டுமே இக்கடன் வசதி வழங்கப்படுகிறது.

கடன் வழங்கல் குறித்த விரிவான விளக்கம் கீழே…

மக்கள் வங்கியினூடாக வழங்கப்படும் கடன்-

வௌிநாடு செல்வதற்கு முன்னரான கடன் (விதேஸிக்கா) – 50,000 . 00 ரூபா வழங்கப்படுகிறது. இக்கடனை மூன்று வருடங்களில் செலுத்தவேண்டும். பெற்றுகொண்டவர் 9 வீதமும் பணியகம் 7வீதமுமாக செலுத்தப்படும்.
வீட்டுக்கடன் – 250,000.00 ரூபா. ஐந்து வருடத்தில் செலுத்த வேண்டும். கடன் பெற்றவர் 9 வீதமும் பணியகம் 7 வீதமுமாக செலுத்தப்படும்.
சுயதொழில் கடன் – 250.000.00 ரூபா. ஐந்து வருடத்தில் செலுத்த வேண்டும். கடன் பெற்றவர் 8 வீதமும் பணியகம் 8 வீதமுமாக செலுத்தப்படும்.

இலங்கை வங்கியினூடாக செலுத்தப்படும் கடன்

வௌிநாடு செல்வதற்கு முன்னரான கடன் (ரன்சவிய) – 50,000 . 00 ரூபா வழங்கப்படுகிறது. இக்கடனை இரண்டு வருடங்களில் செலுத்தவேண்டும். பெற்றுகொண்டவர் முழுமையாக செலுத்த வேண்டும்.
வீட்டுக்கடன் (சரனி) – 300,000.00 ரூபா. ஐந்து வருடத்தில் செலுத்த வேண்டும். கடன் பெற்றவர் 5 வீதமும் பணியகம் 5 வீதமுமாக செலுத்தப்படும்.
சுயதொழில் கடன் (ரன்சவிய) – 3000.000.00 ரூபா. ஐந்து வருடத்தில் செலுத்த வேண்டும். கடன் பெற்றவர் 8 வீதமும் பணியகம் 8 வீதமுமாக செலுத்தப்படும்.

தேசிய சேமிப்பு வங்கியினால் வழங்கப்படும் கடன்

வௌிநாடு செல்வதற்கு முன்னரான கடன் (ரட்ட இத்துரு) – 50,000 . 00 ரூபா வழங்கப்படுகிறது. இக்கடனை ஒன்றரை வருடங்களில் செலுத்தவேண்டும். பெற்றுகொண்டவர் 8.5 வீதமும் பணியகம் 6.5 வீதமுமாக செலுத்தப்படும்.
வீட்டுக்கடன் (சரனி) – 250,000.00 ரூபா. ஐந்து வருடத்தில் செலுத்த வேண்டும். கடன் பெற்றவர் 5 வீதமும் பணியகம் 5 வீதமுமாக செலுத்தப்படும்.

அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியினால் வழங்கப்படும் கடன்

சிரிநிக்கா வீட்டுக்கடன் – 500.000.00 ரூபா, ஐந்து வருடத்தில் செலுத்த வேண்டும். கடன் பெற்றுக்கொண்டவர் 6 வீதமும் பணியகம் 5 வீதமுமாக செலுத்தப்படும்.

வீட்டுக்கடன்

  • வீடு கட்டுவதற்கு அல்லது புதிய வீடு வாங்குவதற்கு
  • காணி வாங்குவதற்கு
  • வீட்டை புதுப்பிப்பதற்கு அல்லது புதிதாக ஒரு பகுதியை கட்டுவதற்கு வழங்கப்படும்.

கடன் கேட்பதற்கான தகைமைகள்

  • மூன்று வருடங்களுக்குள் பணியகத்தில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். இலங்கைக்கு வந்து மூன்று மாதத்திற்குள் கடனுக்காக விண்ணப்பிக்க வேண்டும்
  • குறித்த வங்கியில் ஒரு வருடம் பாவனைக்குட்பட்ட கணக்கு இருக்க வேண்டும். சுமார் ஆறு மாத காலத்திற்கு 500 அமெரிக்க டொலர் பணம் இருத்தல் வேண்டும். கடன் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் 250 அமெரிக்க டொலர் வரவு இருத்தல் வேண்டும்.
  • பயனாளிக்கு பதிலாக மற்றொருவர் பொறுப்பாக நிறுத்தப்படும் பட்சத்தில் அட்டோணி தத்துவத்தினூடாக அதிகாரத்தை கையளித்தல் வேண்டும்.
  • 55 வயதுக்கும் குறைந்தவராக இருத்தல் வேண்டும்.
  • வௌிநாடு செல்வதற்கு முன்னரான கடனை பெறுவதற்கு இரு பிணையாளர் ஒப்பமிட வேண்டும்
  • இலங்கையில் எந்தவொரு வங்கியிலும் வௌிநாட்டிலிருந்த பணம் அனுப்பி 25,000 ரூபாவை சேமிப்பில் வைத்திருத்தல். கடன் பெறுபவர் வௌிநாட்டில் இருப்பதுடன் அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியில் மட்டும் 500,000.00 ரூபாவை கடனாக பெறலாம்.

நன்றி- இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435