இன்று பிற்பகல் 3 மணிமுதல் எதிர்வரும் 2 வாரங்களுக்கு சர்வதேச விமானங்கள் இலங்கையில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (17) இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், உலக நாடுகளிலிருந்து இலங்கையை நோக்கி தற்போது பயணத்தை ஆரம்பித்துள்ள விமானங்களுக்கு தரையிறங்க அனுமதிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.