மார்ச் 30- ஏப்ரல் 3 வரை வீட்டிலிருந்து பணியாற்றும் காலம்

மார்ச் மாதம் 30ம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 3ம் திகதி வரை வீட்டில் இருந்து வேலை செய்யும் காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உட்பட அனைத்து உலக நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை தடுக்கும் வகையில் அரசாங்கம் இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது என்று ஜனாதிபதி செயலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள சேவைகளை தவிர்ந்து ஏனைய அனைத்தும் அரச, அரை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இவ்வறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இக்குறிப்பிட்ட தினங்கள் அரச விடுமுறை நாட்களாக கணிப்பிடப்படாது. பொதுச்சேவையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது அரசின் கடமையாகும். எனினும் மக்கள் ஒன்று கூடுவதை தடுத்து தனிமைப்படுத்தலுக்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

ஏற்கனவே மார்ச் மாதம் 20ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரை வீட்டில் இருந்து பணியாற்றும் காலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அக்காலப்பகுதி இதனூடாக மேலும் நீடிக்கப்படுவதாகவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435