நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களும் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே உடனடியாக அரசாங்கமும் அரசாங்கத்தோடு இணைந்துள்ள மலையக அரசியல் கட்சிகளும் இணைந்து 1000 ரூபாயை பெற்றுக்கொடுக்குமாறு மலையக சகோதரத்துவ இயக்கத்தின் அமைப்பாளர் காளிதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
” அரசாங்கம் பல நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றது.ஆனால் அந்நிவாரணம் குறிப்பிட்ட சில பகுதியிருக்கும் துறையினருக்குமே வழங்கப்படுகின்றது.நாட்டில் பொருளாத துறைக்கு முதுகெழும்பாக செயற்படும் பெருந்தோட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
அதேபோல பாதுகாப்பான முறையில் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல அரசாங்கமும் கம்பனிகளும் ஆயத்தங்களை செய்துக்கொடுக்க வேண்டும்.எனவே இரண்டு நூற்றாண்டுகளாக உரிமைக்காக போராடும் பெருந்தோட்ட மக்களுக்கு கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பு பெற நவடிக்கை எடுப்பதோடு அவர்களின் பொருளாதார பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு உடனடியாக 1000 ரூபாய் வேதனத்தை வழங்குமாறும்.” அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூலம் – மலைக்குருவி