இலங்கையின் முதலாவது கொவிட் 19 தொற்று நோயாளரின் மரணம் இன்று (28) பதிவாகியுள்ளது.
கொழும்பு, ஐடிஎச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான நபரே இறந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர் என்றும் இந்நபர் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்கு நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வருபவர் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளார்.