ஊழியர் சேமலாப நிதியை (EPF) இயன்றளவான அனைத்து வழிமுறைகளிலும் அரசாங்கம் பாதுகாக்கும் என தொழிற்சங்கங்களிடம் தாம் உறுதியளித்துள்ளதாக வெளிவிவகாரம், திறன் அபிவிருத்தி, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்
தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்
“ஊழியர் சேமலாப நிதி எனப்படுவது தொழிலாளர்களின் பாதுகாப்பு நிதியாகும். ஓய்வுபெற்றதன் பின்னர் பயனளிக்கும் இந்த நிதியத்தை இயன்றளவு அனைத்து வழிமுறைகளையும் அரசாங்கம் பாதுகாக்கும். இலட்சக்கணக்கான ஊழியர்களின் உரிமையான இந்த நிதியத்திலிருந்து பணத்தை எடுப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது” என தொழிற்சங்களிடம் தான் உறுதியளித்துள்தாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.