ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு முயற்சிப்பார்களாயின் அவ்வாறானோர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஊரடங்குச்சட்டம் அமுல் நடத்தப்பட்ட கடந்த 19 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 19 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் மாத்திரம் ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பிரதி பொலிஸ் மா அதிபர் இவ்வாறு சட்டத்தை மீறுவோர் நாளை (இன்று) முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள் என்றும் கூறினார்.
அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள அவசரகால அனுமதிப்பத்திரத்தை சிலர் முறைகேடாக பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது இவ்வாறோனருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.