இலங்கை வௌிவிவகார அமைச்சின் கடிதப்படிவத்தில் இலங்கையர்கள் பாதுகாப்பாகவும் அதேநேரம் தயார் நிலையிலும் இருக்குமாறு குறிப்பிட்ட சமுக வலைத்தளங்களில் வௌியாகியுள்ள கடிதம் போலியானது என்று கட்டாருக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
வௌிவிவகார அமைச்சின் முத்திரைகளுடனான கடித படிவத்தில் கட்டாரில் உள்ள இலங்கையர்கள் கடவுச்சீட்டுக்களுடன் தயார் நிலையில் இருக்குமாறு குறிப்பிடப்பட்ட கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் உலாவருகிறது. இது முற்றிலும் போலியானது என்று சுட்டிக்காட்டியுள்ள தூதரகம் அவ்வாறான போலி தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று புலம்பெயர் இலங்கையர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கையின் தேசிய சின்னத்துடன் வெளியிடப்படும் கத்தார் இலங்கை தூதரகத்தின் அறிவிப்புகளை மட்டும் பின்பற்றுமாறு கட்டாருக்கான இலங்கைத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கை தூதரகம்
தோஹா-கட்டார்
16.04.2020
மூலம்- Qatar news in Tamil