வண்ணப்பூச்சுகள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் அரை மில்லியன் வரை வேலை இழப்பு ஏற்படும் என்று இலங்கை ஆட்டோமொபைல் சேவை வழங்குநர்கள் சங்கம் (SLASPA) எச்சரித்துள்ளது.
500,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
” வாகன பூச்சு இறக்குமதி ஆட்டோமொபைல் பட்டறைகள் என்பவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையானது அதனை நம்பியுள்ள தொழிலாளர்களின் வருமானத்தை இழக்கச் செய்வதுடன் தொழிலையும் சில மாதங்களுக்குள்ளேயே இழக்கச் செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
“உதிரி பாகங்கள் மீதான கட்டுப்பாடுகளினால் மோட்டார் வாகன பாவனையாளர்கள் கடுமையான அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். வீதியோரங்களிலும் வாகன திருத்துமிடங்களிலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கும் நிலை ஏற்படும் என்று சுட்டிக்காட்டியுள்ள அச்சங்கம் ஆட்டோ மொபைல் சேவை நிறுவனங்களுக்கு 84 மாத வரிச்சலுகை வழங்குமாறும் அரசிடம் கோரியுள்ளது.
மூலம் – இக்கொனொமினெக்ஸ்ட்/ வேலைத்தளம்