நிவாரணக் கடனுக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு – மத்தியவங்கி

கொவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட வர்த்தகம் மற்றும் தனிநபர்களுக்கான நிவாரணக் கடனுக்காக விண்ணப்பிப்பதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நிவாரணங்களுக்காக இம்மாதம் 15ம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் நிதி நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வோர் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அதனை கவனத்திற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 வீத வருடாந்த வட்டியுடன் கூடிய இரண்டு மாத உழைக்கும் மூலதன கடன் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதற்காக விண்ணப்பிக்கும் கால எல்லையே நீடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்ட முடிவுத் திகதி கடந்த மாதம் 30ம் திகதியாகும். கடந்த 28ம் திகதி 2020 6ம் இலக்க சுற்றுநிரூபத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435